Posts
Showing posts with the label IFTTT
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் லாலாப்பேட்டை பகுதியில் இன்று 1.12.2017 சிவசிக்தி திருமண மண்டபத்தில் அரசு சார்பில் பெண்களுக்கு வளைக் காப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஐம்பது பேருக்கு என்னால் முடிந்த சக்திக்கு ஏற்ப வளையல் வழங்கினேன். அப்போது இனிமேல் பிறக்கின்ற குழந்தைகள் போலியோவில் பாதிப்பு அடையக் கூடாது என்றும் பிறக்க போகும் குழந்தைகள் நன்றாக பிறக்க வேண்டும் என இறைவனை வேண்டிக் கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் வழங்கினேன். *குறிப்பு:* நான் சிறு வயதில் போலியோவால் பாதிப்பு அடைந்து, ஐந்து வயது வரை நடக்க முடியாமல் இருந்தேன். பின்பு மெது மெதுவாக நடக்க தொடங்கினேன். இன்று என்னால் முடிந்த அளவு அரசு வழங்கும் நல திட்டங்கள் பொதுமக்களுக்கு பெற்று தந்து வருகிறேன். கடந்த பத்து ஆண்டுகளாக மாற்று திறனாளிகள் தினம் அன்று பள்ளி மாணவர்களுக்கு ஏழை குழந்தைகளுக்கும் நோட்டு மற்றும் புத்தகம் வழங்கி வருகிறேன். கடந்த ஆண்டும் இவ்வாண்டும் என்னால் நலத்திட்ட உதவிகள் வழங்க முடியாமல் போனது. அதற்கு முன்பு நான் சேமித்த பணத்தை விழா கொண்டாடினேன். தற்போது நடிப்பதற்கு எனக்கு சிலர் வாய்ப்பு தர உள்ளனர். அதில் வரும் தொகையினை உணவு செலவு போக மீதம் உள்ள பணத்தை ஏழை குழந்தைகளுக்கு உதவி செய்வேன். நடிகர் நாகராஜன்9894779404
- Get link
- X
- Other Apps