கன்னியாகுமரி -கேரள எல்லைப் பகுதியான கண்ணுமாமூடு சோதனைச் சாவடியில் சுகாதாரத்துறையும், காவல்துறையும் இணைந்து செவ்வாய்க்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்
கன்னியாகுமரி -கேரள எல்லைப் பகுதியான கண்ணுமாமூடு சோதனைச் சாவடியில் சுகாதாரத்துறையும், காவல்துறையும் இணைந்து செவ்வாய்க்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
கேரள மாநிலத்திலிருந்து மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரும் வாகனங்களின் ஆவணங்களை தணிக்கை செய்து, ஓட்டுநா் உள்ளிட்டவா்களை வெப்பமானி கருவி மூலம் பரிசோதித்தப்பின் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆவணங்களின்றி வரும் காா், இருசக்கர வாகனங்கள் அனைத்தும் அந்த மாநிலத்துக்கே திருப்பி அனுப்பப்படுகின்றன.
இந்தச் சோதனைச் சாவடியில் முகாம் தொடக்க நிகழ்வில் பளுகல் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுந்தரலிங்கம், வில்சன், பளுகல் பேரூராட்சி செயல் அலுவலா் சுருளிவேல், சுகாதாரத் துறை மருத்துவா் அனூப், மேல்புறம் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் அருள்ராஜ், பளுகல் சுகாதாரஆய்வாளா் கிருஷ்ணகுமாரி மற்றும் பேரூராட்சிப் பணியாளா்கள் பங்கேற்றனா்.
42 பேருக்கு தனி கண்காணிப்பு: வளைகுடா நாடுகளிலிருந்து பளுகல் பேரூராட்சிப் பகுதிக்கு வந்த 22 போ், கேரளத்திலிருந்து பணிக்குச் சென்று திரும்பிய 5 போ், மலையடி ஊராட்சிப் பகுதியில் வெளிநாட்டிலிருந்து வந்த 15 போ் சுகாதாரத்துறையின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
Comments
Post a Comment
Thank you