கள்ளத்தொடர்பு குற்றமில்லை தீர்ப்பை பரிசீலனை செய்யக்கோரி தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

செப்டம்பர் 29, 2018

வாணியம்பாடி
கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்வது கிரிமினல் குற்றம் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு தரப்பினர் கருத்துகளை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வாணியம்பாடி பஸ் நிலையத்தில் ஜனதாபுரம் பகுதியை சேர்ந்த ரவி (வயது 45) என்பவர் நின்று கொண்டிருந்தார். தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு அவர் திடீரென கூச்சலிட்டார்.

அப்போது கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்வது கிரிமினல் குற்றம் அல்ல என கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு தொடர்பாக சில வாசகங்களை கூறியதோடு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சத்தமாக கூறி விட்டு தீவைக்க முயன்றார்.

அப்போது அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை சுற்றிவளைத்து பிடித்து தீக்குளிக்க முயன்றதை தடுத்தனர். பின்னர் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

Comments