மணல் கடத்திய 8 பேர் கைது காவேரிப்பாக்கம், வேலூர் பகுதிகளில்


காவேரிப்பாக்கம் அடுத்த அவளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ஆயர்பாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள கசகால்வாயிலிருந்து வந்த மினி வேனை மடக்கி சோதனையிட்டனர். சோதனையில் அரசு அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் மினிவேனை பறிமுதல் செய்து அவளூர் காவல் நிலைத்திற்கு கொண்டு சென்றனர். மேலும், காவேரிப்பாக்கம் அடுத்த கட்டளை கிராமத்தை சேர்ந்த முருகன்(36), விக்னேஷ்(26) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வேலூர்: விரிஞ்சிபுரம் போலீசார் நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் கருகம்பத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக மணல் கடத்தி வந்த 2 மாட்டு வண்டிகளை மடக்கி பிடித்தனர். அதேபகுதியை சேர்ந்த கேசவன்(38), சங்கர்(40) ஆகியோரை கைது செய்தனர்
வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

வேலூர் வடக்கு போலீசார் நேற்று முன்தினம் காலை சேண்பாக்கம் பகுதியில் மணல் கடத்தி வந்த மாட்டுவண்டியை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய பிரபாகரன் என்பவரை தேடி வருகின்றனர்.சத்துவாச்சாரி பாலாற்று பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றபோது மணல் கடத்தி வந்த 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சத்துவாச்சாரியை சேர்ந்த அனுப்குமார்(29), லஷ்மிகாந்தன்(28) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய லஷ்மிகாந்தன் என்பவரை தேடி வருகின்றனர்.நேற்று காலை விரிஞ்சிபுரம் போலீசார் மேல்மொணவூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அவ்வழியாக மணல் கடத்தி வந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்து அதேபகுதியை சேர்ந்த குப்பன்(54) என்பவரை கைது செய்தனர்.அரியூர் போலீசார் நேற்று ரோந்து சென்றபோது, மணல் கடத்திய டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். இதில் குடியாத்தம் அருகே கலர்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் பாலாஜி(24) என்பவரை கைது செய்தனர் வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

Comments