₹3 லட்சம் மோசடி செய்த புரோக்கர் மீது புகார் போலீசார் விசாரணை வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக


ஜோலார்பேட்டை,  வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த புரோக்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி அருகே உள்ள வெள்ளைய கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர்கள் ரஞ்சித்(24), மயிலாஜலம்(24), கோவிந்தராஜ்(27) ஆகியோர் வெளிநாட்டில் வேலைக்கு செல்வதாக முடிவு செய்தனர்.அதன்படி நாற்றம்பள்ளி அடுத்த வேட்டப்பட்டையை சேர்ந்த கமலநாதன்(42). என்பவர் வெளிநாட்டிற்கு வேலைக்காக ஆட்கள் அனுப்பும் புரோக்கராக இருப்பது தெரிந்தது. இதனால் ரஞ்சித், மயிலாஜலம், கோவிந்தராஜ் ஆகியோர் மலநாதனை அணுகினர்.அப்போது, அவர் அவர்களிடம் தலா ₹1 லட்சம் வீதம் ₹3 லட்சம் வாங்கினாராம். மேலும், அங்கு ₹40 ஐ முதல் ₹50 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும் என்றாராம்.தன்படி கடந்த மார்ச் 13ம் தேதி 3 பேரையும் மலேசியாவுக்கு அனுப்பி வைத்தார்.ஆனால் அங்கு கமலநாதன் சொன்ன நிறுவனத்தில் வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். மேலும் வேறு நிறுவனத்தில் மாதம் ₹15 ஆயிரத்துக்கு வேலை செய்து வந்தனர்.இதனால் அவதிப்பட்ட 3 பேரும், அங்குள்ள ஒரு தொண்டு நிறுவனம் மூலம் கடந்த மாதம் 30ம் தேதி சொந்த ஊர் திரும்பினர். இந்நிலையில், டூரிஸ்ட் விசா மூலமாக தங்களை வெளிநாட்டிற்கு அனுப்பிய கமலநாதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த 11ம் தேதி கலெக்டர், எஸ்பி மற்றும் சப்-கலெக்டரிடம் புகார் அளித்தனர்.இந்நிலையில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் பாதிக்கப்பட்ட 3 பேரிடமும் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினார் வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

Comments