சென்னை சூளைமேட்டில் தனியார் கல்லூரியில் பிகாம் படிக்கும் மாணவி பாரதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை. ஆங்கில பாடத்தீல் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக சூளைமேடு போலீசார் விசாரணையில் தகவல்.
விழுப்புரம் 🌍
கோட்டக்குப்பம் அருகே அணிச்சங்குப்பம் சோதனை சாவடியில், புதுவையிலிருந்து மினி டெம்போவில் கடத்திவரப்பட்ட 444 மதுபாட்டில்கள் பறிமுதல்.பாபு, தேவா இருவரும் கைது.போலிசார் நடவடிக்கை.*

உளுந்தூர்பேட்டை🌍
பாலி புதுக்காலனி பகுதியில் குடிநீர் 5 நாட்களாக வராததை கண்டித்து காலி குடத்துடன் பொதுமக்கள் போராட்டம்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மானிய கோரிக்கைகள் மீது தமிழக சட்டப்பேரவையில் இன்று விவாதம்
🌴எழும்பூரில் காவலர்கள் ரத்த தான நிகழ்ச்சியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை எழும்பூரில் காவலர்கள் ரத்த தான நிகழ்ச்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 2066 காவலர்கள் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.
அமைச்சர் ஜெயக்குமார் இல்லத்தில் மீனவர்கள் நண்டு விடும் போராட்டம்
சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அமைச்சர் ஜெயக்குமார் இல்லத்தில் மீனவர்கள் நண்டு விடும் போராட்டம் நடத்தி உள்ளனர். பட்டினப்பாக்கத்தில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட வீடுகளை அமைச்சர் சரி செய்யாததை கண்டித்து போராட்டம் நடத்தி உள்ளனர்.

Comments
Post a Comment
Thank you