*சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம்*

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அடுத்த, பால்நாங்குப்பம் கிராமத்தில், சாலை விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம், நேற்று நடந்தது. வேலூர் மாவட்ட, எஸ்.பி., பகலவன் தலைமை வகித்து, பேசுகையில், ''பள்ளி, கல்லூரி வாகனங்கள், குறிப்பிட்ட வேகத்திற்கு, மேல் செல்லக்கூடாது. மொபைலில் பேசியபடியும், மதுபோதையிலும், வாகனத்தை ஓட்டக்கூடாது. சாலை போக்குவரத்து விதிகளை, மீறுவோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று பேசினார். வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் மோகன் நன்றி கூறினார்.

Comments