மதத்தை வைத்து பிரித்தாலும் அரசியலை செய்ய வேண்டாம் இனிமேல் இந்துக்களுக்கு எதிராக செய்தால் எங்களின் நடவடிக்கை கடுமையாக இருக்கும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திராஜான் காட்பாடியில் ஆவேச பேட்டி
வேலூர் மாவட்டம்
மதத்தை வைத்து பிரித்தாலும் அரசியலை செய்ய வேண்டாம் இனிமேல் இந்துக்களுக்கு எதிராக செய்தால் எங்களின் நடவடிக்கை கடுமையாக இருக்கும்
பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திராஜான் காட்பாடியில் ஆவேச பேட்டி
வேலூர் மாவட்டம், காட்பாடியில் இன்று மாலை பாஜகவின் மகாசக்தி கேந்திரா உறுப்பினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திராஜான் கலந்துகொண்டார் .பின்னர் செய்தியார்களிடம் பேசிய அவர்,
பாஜக சார்பில் தமிழ் தாமரை யாத்திரை என்று தமிழக முழுவது சுற்றி வருகின்றோம். தமிழகத்தில் பாஜக பலம் பொருந்திய கட்சியாக வளர்ந்து வருகின்றது .
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை எந்த நேரத்திலும் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம் எங்களை பொருத்தமற்றில் தமிழகத்தில் ஒரு மாற்று சக்தியாக பாஜக உள்ளது ,வேறு எந்த கட்சியும் வரமுடியாது பாஜக மட்டும் தான் வர முடியும்.
தமிழகத்தில் ஸ்டாலின் போன்றோர் மத வெறுப்பை வைத்து அரசியல் செய்ய நினைக்கின்றனர் .
ராமர் ரதம் நம்பிக்கை உள்ளவர்கள் துதிக்கட்டும் உங்களுக்கு வேண்டாம் என்றால் விட்டு விடுங்கள் அதைவிட்டு ரதமே தமிழகத்துக்குள் வரக்கூடாது என்றால் இந்து உணர்வுள்ளவர்கள் மீது தொடுக்கும் தாக்குதல் என்று நான் சொல்கிறேன் .
ஏன் கம்யூனிஸ்ட் ஆளுகின்ற மாநிலத்தில் எதிர்க்கவில்லை ஏன் என்றால் எதிர்க்க முடியாது கவனம் ஈர்ப்பு கொண்டு வருவேன் என்று சொல்கின்றனர் ரதத்தை எதிர்த்தால் நாங்களும் கடுமையாக எதிர்ப்போம்.
திருமாவளவன் சொல்கிறார் மத விரோத மற்றும் நல்லிணக்கத்துக்கு விரோத தேர் என்று சொல்கிறார் ,திருமாவளவன் தான் நல்லிணக்கத்துக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார். மதத்தை வைத்து பிரித்தாலும் அரசியலை செய்ய வேண்டாம் இனிமேல் இந்துக்களுக்கு எதிராக செய்தால் எங்களின் நடவடிக்கை கடுமையாக இருக்கும் அதுவும் சட்டம் ஒழுங்கு உட்பட்டு.இருக்கும்
உச்ச நீதிமன்றம் உத்தரவின் படி காவிரி மேலான்மை வாரியம் அமைக்க இன்னும் கால அவகாசம் உள்ளது நீர்வள துறை அமைச்சர் அதற்க்கு உண்டான பனி துவங்கிவிட்டது. என்று தெரிவித்துள்ளார் காவிரி மட்டுமல்லாமல் கோதாவரி இணைக்க நீண்டநாள் திட்டம். 120 வருடமாக தீர்க்கபடாத பல பிரச்சனை பாஜக தீர்க்க முயன்று வருகிறது ,
சாஹார்மால திட்டம் மூலம் 1 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டடு உள்ளது. கிடப்பில் போடப்பட்ட வேலூர், சேலம் விமான சேவை மூலம், துறைமுகம் மூலம் பல வேலை வாய்ப்பு அதிகரித்து உள்ளது. கடந்த ஓர் ஆண்டில் தமிழகத்தில் முத்திரா லோன் திட்டத்தில் 52 லட்சம் தொழில் முனைவோர் பயன்பெற்று உள்ளனர்.
சீதாராமையா பல பிரிவினை முயற்சி மேற்க்கொண்டு வாக்குகளை வாங்க நினைக்கிறார் தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைத்து தனி கொடி உருவாக்குகிறார் அதை இளைஞர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.தேசிய ஒருமைபாட்டை தான் மக்கள் விரும்புகிறார்கள்
ஊழலை மறைக்கவே சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியில் இருந்து விலகி உள்ளார் அவர் விலகியதால் எங்களுக்கு பாதிப்பு இல்லை. அவர் விலகியதால் பாஜக மேலும் வலிமை பெரும் .அவர் மாநிலத்திற்கு அதிக நிதி கேட்டு பெறுகிறார்.ஆனால் எந்த திட்டமும் நிறைவேற்றாமல் அந்த நிதியில் ஊழல் செய்து வருகிறார் .அவர் கேட்கும் சிறப்பு அந்தஸ்த்து வழங்கினால் தமிகம் எந்த வளர்ச்சியும் பெறாமல் மிகவும் பின் தங்கிய மாநிலாமாக தமிழகம் இருக்கும்
பாஜக வுடன் தமிழக அரசு இணக்கமாக உள்ளதால் பல திட்டங்கள் வருகின்றது. நாங்கள் பல திட்டங்கள் வளர்ச்சி அடைய நியூட்ரினோ, ஐட்ரோ கார்பன் திட்டம் போன்றவை கொண்டு வருகிறோம் எங்களது கட்சி பல பொருந்தியதாக வருகிறோம் வருங்காலம் சொல்லும் என்று கூறினார்.
Comments
Post a Comment
Thank you