*பெண் ஊழியரிடம் 10 பவுன் நகை பறிப்பு*

பதிவு செய்த நாள்: மார் 22,2018 09:51

சோளிங்கர்: சோளிங்கர் அருகே, பெண் ஊழியரிடம், 10 பவுன் தங்க செயின் பறித்தவர்களை, போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையைச் சேர்ந்தவர் வீராசாமி, 60. ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது, மனைவி மல்லிகா, 50. இவர், பாணாவரம் அரசு சுகாதார நிலையத்தில், சுகாதார ஆய்வாளராக உள்ளார்.நேற்று முன் தினம், காலை, 9:00 மணிக்கு, பணிக்கு சென்றார். மாலை, 6:00 மணிக்கு, கணவன், மனைவி இருவரும், வீட்டிற்கு, பைக்கில் வந்து கொண்டிருந்தனர். பாணாவரம் கூட்டு ரோட்டில் வந்த போது, பைக்கில் வந்த இரண்டு பேர், வீராசாமியின் பைக் மீது மோதினர். இதில், வீராசாமியும், மல்லிகாவும், கீழே விழுந்தனர். அப்போது, மல்லிகாவிடம் இருந்து, 10 பவுன் தங்க செயினை, மர்மநபர்கள் பறித்து கொண்டு, பைக்கில் தப்பினர். புகாரின்படி, பாணாவரம் போலீசார், விசாரிக்கின்றனர்.

Comments