*ஆண்டுக்கு 1,000 இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி: கலெக்டர் தகவல்*

வேலூர்: ''புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் திட்டத்தின் மூலம், ஆண்டுக்கு, 1,000 இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்படும்,'' என, வேலூர் கலெக்டர் ராமன் கூறினார்.
இது குறித்து அவர், நிருபர்களிடம் கூறியதாவது: புதிய தொழில் முனைவோர் உருவாக்கும் திட்டத்தின் கீழ், 2017-18ம் ஆண்டில், 1,000 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு, 49 புதிய தொழில் முனைவோரை உருவாக்க திட்டமிட்டு, 54 பேரை உருவாக்கி மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது. நீட்ஸ் திட்டத்தின் மூலம், 600 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. மாவட்ட தொழில் மையம் சார்பில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஆம்பூர், அரக்கோணம், வாணியம்பாடியில், 1,500 இளைஞர்களை தேர்வு செய்து தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு, 420 பேருக்கு தொழில் துவங்க, 32 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், 154 பேருக்கு, 54 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பின்னர், காட்பாடி கல்புதூரில் பிளாஸ்டிக்கில் இருந்து கதவு, ஜன்னல் செய்யும் தொழிற்சாலையை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Comments